Pages - Menu

Pages - Menu

Menu

புதன், 11 செப்டம்பர், 2013

பாலியல் வன்கொடுமை:





" மேலும் ஒரு ஹிந்து சாமியார் கைது!

5 Sep 2013

ஸெஹோர்: ஆசிரமத்தில் வைத்து திருமணமான இளம் பெண்ணை அநியாயமாக அடைத்து வைத்து பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 65 வயதான ஹிந்து சாமியாரை போலீஸ் கைது செய்துள்ளது.

சாமியாரின் பாலியல் வெறியால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வயது 24. மஹேந்திர கிரி என்ற துணு பாபா என்ற ஹிந்து சாமியார்தான் இந்த அநியாயத்தை புரிந்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பிரபல ஹிந்து சாமியார் ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டிருந்தார். பாலியல் பலாத்காரத்திற்கு இரையான இளம் பெண்ணின் கணவனும், மாமியாரும் ஆசிரமத்தில் தங்கியுள்ளனர். பாலியல் பலாத்காரத்திற்கு உதவிய இவர்களையும் கைது செய்துள்ளதாக போலீஸ் கூறுகிறது.

கடந்த மே மாதம் இளம் பெண், விஸ்ரம் பன்சாரா என்பவரை திருமணம் முடித்தார். திருமணம் முடிந்ததும் தாமதிக்காமல் சாமியார் தனது பாலியல் வெறியை இப்பெண் மீது துவக்கியுள்ளார்.

ஹிந்து சாமியார் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூது இணையத்தளம் : http://www.thoothuonline.com/

தூது பேஸ்புக் : http://www.facebook.com/ThoothuOnlineLike