Pages - Menu

Pages - Menu

Menu

சனி, 19 டிசம்பர், 2015

தாக்குதலையும் தடுக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த காவல்துறை

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் ஆம் ஆத்மி கட்சியினர் மீது பா.ஜ.க குண்டர்கள் நடத்திய தாக்குதலையும் தடுக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த காவல்துறையினரையும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது.
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அலுவலகத்தில் சி.பி.ஐ மேற்கொண்ட சோதனையை கண்டித்து நேற்று (17-12-2015) ஆம் ஆத்மி கட்சியினர் ஆம்பூர் பா.ஜ.க அலுவலகம் முன் போராட்டம் நடத்த வந்தனர். அப்போது அங்கிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பா.ஜ.க குண்டர்கள் ஆம் ஆத்மி கட்சியினரையும், அவர்கள் வந்த வாகனத்தையும் காவல்துறை முன்னிலையிலேயே தாக்கி வன்முறையில் ஈடுபட்டனர்.
அதே போல் அந்த இடம் வழியாக சென்று கொண்டிருந்த ஒரு முஸ்லிம் குடும்பத்தினரின் வாகனத்தை இடைமறித்து வாகனத்தையும், வாகனத்தில் உள்ள முஸ்லிம்களையும் தீவிரவாதி அடியுங்கள் என்று முழக்கமிட்டு தாக்கிய சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை மக்கள் மன்றத்தில் ஏற்படுத்தியுள்ளது.
வன்முறை அரசியலுக்கு வித்திட்டது மட்டுமில்லாமல் முஸ்லிம் விரோத போக்கை வெளிப்படுத்தியதன் வாயிலாக தமிழகத்தில் உயிர்த்தெழுந்திருக்கும் மத நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் நோக்கில் செயல்படும் மதவாத பா.ஜ.க குண்டர்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக்கொள்கிறது.
மாநில துணைத்தலைவர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.
Moulavi HKM Zaini SDPI
இஸ்லாமியர்களின் ஊடகத்துறை's photo.