Pages - Menu

Pages - Menu

Menu

வெள்ளி, 1 ஜூலை, 2016

கல்லூரி மாணவி பீரித்தி தற்கொலை!

ஆடைகளை கலைக்கச் சொல்லி ராகிங்: கல்லூரி மாணவி பீரித்தி தற்கொலை!
சத்தியமங்களம் பகுதியை சேர்ந்த பிரீத்தி ப்ளஸ் 2 தேர்வில் 1080 மதிப்பெண் பெற்றுள்ளார். பெற்றோர்கள் இவரை கடந்த 22 ஆம் தேதி குன்னூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் சி.ஏ ல் சேர்த்துள்ளனர். சேர்த்த சில நாளில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ராகிங் கொடுமையினால் தான் எங்களது மகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கல்லூரியில் சேர்ந்தவுடன் சீனியர் மாணவர்கள் நள்ளிரவில் குளித்து விட்டு அரை நிர்வாணமாக பீரித்தியை வரச் சொல்லி துன்புறுத்தியுள்ளனர். சாப்பிட விடாமல் தூங்க விடமாமல் பீரித்தியை ராகிங் செய்துள்ளனர். இது குறித்து பீரித்தி பெற்றோரிடம் போனில் கூறி என்னை அழைத்து சென்று விடுங்கள் என கதறி உள்ளார். பெற்றோாகள் கல்லூரிக்கு செல்வதற்குள் மாணவி இறந்து விட்டதாக கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.
இது குறித்து பெற்றோர்கள் குன்னூர் கோட்டாட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.
மனிதன் பரபரப்பான வாழ்கைக்கு மாற மாற சமூகத்தில் உள்ள மனிதநேயம் அறவே செத்து போய் வருகின்றது. இப்படியே போனால் நிச்சயம் தமிழகம் விரைவில் சுடு காடாகிவிடும்.