Pages - Menu

Pages - Menu

Menu

ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

ஒடிசா மாநிலத்தில் நடந்த அவலநிலை....,. இன்று தமிழகத்தின் புளியங்குடியில்...

ஆம்புலன்ஸ் வர மறுப்பு......
ஒடிசா மாநிலத்தில் நடந்த அவலநிலை....,. இன்று தமிழகத்தின்
புளியங்குடியில்...
நெல்லை மாவட்டம் புளியங்குடியில் 4 வயது குழந்தைக்கு#பாம்பு கடித்து விட்டது... உடனடியாக அவரது தாயார் புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார்... அங்கு போதிய மருந்து இல்லை எனவும் உடனடியாக தென்காசி கொண்டு செல்லுமாறும் அங்கு பணிபுரியும் நர்ஸ் சொல்லிவிட்டார.... ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த அந்த தாய் ஆம்புலன்ஸ் உதவி கோரினார.....அனால் அந்த நர்ஸ் ஆம்புலன்ஸ் வராது பஸ்ஸில் செல்லும்படி கூறினார்....
அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த சமுதாய சேவை பேரியக்கமான தமுமுகவின் ஆம்புலன்ஸை கண்ட அந்த தாய் கண்ணீர்மல்க நடந்தவைகளை கூறினார... உடனடியாக தமுமுகவின் ஆம்புலன்ஸில் அந்த ஏழை தாயின் குழந்தையை ஏற்றிக்கொண்டு தென் காசி மருத்துவமனைக்கு விரைந்தது... தமுமுகவின் ஆம்புலன்ஸ் அங்கு அந்த குழந்தைக்கு வேண்டிய மருத்துவ ஏற்பாடுகளை செய்து விட்டு புறப்பட்டனர் தமுமுகவினர்..