Pages - Menu

Pages - Menu

Menu

வியாழன், 13 அக்டோபர், 2016

செல்போன்களுக்கு இனி 11 இலக்க எண்கள் அறிமுகம்..!

Fotorcreated2

செல்போன்களுக்கு 10 இலக்க எண்கள் தற்போது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், தொலை தொடர்புத்துறை 11 இலக்க எண்களை விரைவில் அறிமுகப்படுத்தபட உள்ளது.
செல்போன் நிறுவனங்கள் கடந்த 2003-ஆம் ஆண்டு 10 இலக்க மொபைல் எண்களை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், தொலை தொடர்புத்துறை அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்த எண்களை பராமரிக்க முடிவு செய்திருந்தது. ஆனால் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவதையொட்டி, 10 இலக்க எண்களை அளிப்பதில் செல்போன் நிறுவனங்களுக்கு பல சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எனவே 11 இலக்க எண்களை விரைவில் அறிமுகப்படுத்த போவதாகவும் தொலைதொடர்பு துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.