Pages - Menu

Pages - Menu

Menu

திங்கள், 2 ஜனவரி, 2017

ஏ.டி.எம். மையத்தில் பணம் இல்லாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்!

வாலாஜா அருகே வங்கி ஏ.டி.எம்.மையத்தில் பணம் இல்லாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டம் வாலாஜா அருகே தேசிய வங்கி ஏ.டி.எம். செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் 1ம் தேதி முதல் நான்காயிரத்து 500 ரூபாய் பணம் எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நீண்ட நேரம் ஆகியும் ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்பாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் முத்துக்கடை - வாலாஜா சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 

தகவல் அறிந்து வந்த போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்திரவாதம் அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். 
ஏ.டி.எம். மையத்தில் பணம் இல்லாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்!