Pages - Menu

Pages - Menu

Menu

செவ்வாய், 3 ஜனவரி, 2017

பண மதிப்பிழப்பு விவகாரம் பற்றி அமெர்த்தியா சென் எச்சரிக்கை

பண மதிப்பிழப்பு விவகாரம் பற்றி அமெர்த்தியா சென் எச்சரிக்கை

பண மதிப்பிழப்பு விவகாரம், முடிவுகளை பற்றி சிந்திக்காமல் அவசரகதியில் எடுக்கப்பட்ட முடிவு என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமெர்த்தியா சென் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்காள மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அனைத்து தரப்பிலும் உரிய ஆலோசனை நடத்தி விட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கருதவில்லை என குறிப்பிட்டார். 

விளைவுகள் பற்றி சிந்திக்காமல் அவசரகோலத்தில் எடுக்கப்பட்ட முடிவு இது என்றும் பொருளாதாரத்தை பொறுத்தவரை இந்த முடிவுக்கு பின்னால் உள்ள காரணத்தை கண்டறியமுடியல்லை என்றும் குறிப்பிட்டார். பண மதிப்பு நீக்க நடவடிக்கை எதிர்மாறான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.