Pages - Menu

Pages - Menu

Menu

வெள்ளி, 31 மார்ச், 2017

மனித மூளையும் கணினியும் இணையும் தொழில்நுட்பம் March 29, 2017

இன்றைய உலகில் இயந்திரங்களின் ஆதிக்கத்தில் மனிதனின் திறன் கொஞ்சம் கொஞ்சமாக காலாவதியாகிக் கொண்டிருக்கும் சூழலில், மனித மூளையும் கணினியும் ஒருகிணைந்து இயங்குவதற்கு புதிய தொழில்நுட்பத்தை நியூரல் லிங் என்ற நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. 

அமெரிக்காவிலுள்ள ஸ்பேஸ் எக்ஸ்,டெஸ்லா நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் இந்த நியூரல் லிங் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார் நியூரல் லேஸ் என்ற தொழிநுட்பத்தின் மூலம் மனித மூளையும் கணினியும் இணைக்கத்திட்டமிட்டுள்ளனர். 

இத்துடன் இந்த தொழில்நுட்பத்தின் உதவியுடன் மனிதனின் மூளையில் எண்ணங்களைப் பதிவேற்ற, பதிவிறக்க முடியும் எனவும் கூறப்படுகிறது. மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் என்று பெயரில் நியுரல் லிங் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் செயற்கை நுண்ணறிவு இயந்திரங்களை எதிர்கொள்வதற்கு இந்தத் தொழில்நுட்பம் உதவும் என்றும் மனிதனின் அறிவுத்திறனுக்கும் டிஜிட்டல் திறனுக்கும் இடையே இணைக்கும் பாலமாகும் அமையும் இந்தத் தொழில்நுட்பம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நியூரல் லிங் நிறுவனத்தின் திட்டங்கள் சார்ந்த அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும்