Pages - Menu

Pages - Menu

Menu

ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

தமிழகத்தில் மேலும் 3 இடங்களில் நீட் தேர்வு

தமிழகத்தில் இந்தாண்டு மேலும் 3 இடங்களில் நீட் தேர்வு நடைபெறும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஏற்கனவே 80 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற்று வந்தது. இதில் தமிழகத்தின் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய இடங்களும் அடங்கும். இந்நிலையில் மேலும் 23 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இதில் தமிழகத்தில் நாமக்கல், வேலூர், நெல்லை ஆகிய மேலும் 3 இடங்களும் இடம்பெற்றுள்ளன. பிரகாஷ் ஜவடேகர் இத்தகவலை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.