Pages - Menu

Pages - Menu

Menu

ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

மானிய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை உயர்த்தியது மத்திய அரசு April 02, 2017

மானிய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை உயர்த்தியது மத்திய அரசு


மானிய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 5 ரூபாய் 57 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.

மானிய சுமையை குறைக்கும் பொருட்டு மத்திய அரசு மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை கடந்த மாதம் 1ம் தேதி 86 ரூபாய் கூடுதலாக உயர்த்தியிருந்தது. மேலும் மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டர் விலையில் 13 பைசா உயர்த்தியிருந்தது. இந்நிலையில், மானிய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் கூடுதலாக 5 ரூபாய் 57 காசுகள் உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று 440 ரூபாய்க்கு விற்பனையாகும். இதேபோல், மானியமில்லா சிலிண்டர் விலையில் 14 ரூபாய் 50 காசுகளை குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.