Pages - Menu

Pages - Menu

Menu

வெள்ளி, 28 ஏப்ரல், 2017

கண்மாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றம்! April 28, 2017

கண்மாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றம்!


சிவகாசி சிறுகுளம் கண்மாய் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை இடிக்கும், இரண்டாம் கட்டப் பணிகள் துவங்கியுள்ளன. விருதுநகர் மாவட்டம், சிறு குளம் கண்மாயை ஆக்கிரமித்து ஏராளமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வேண்டுமென சிவகாசி வட்டார வரி செலுத்துவோர் சங்கம் சார்பாக,  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. 

இதையடுத்து கடந்த 2012-ஆம் ஆண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற முற்பட்டபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்டோ டிரைவர் கணேஷ் என்பவர், பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆக்கிரமிப்பு அகற்றம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில், ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணி இரண்டாம் கட்டமாக இன்று தொடங்கப்பட்டன.