Pages - Menu

Pages - Menu

Menu

வெள்ளி, 28 ஏப்ரல், 2017

உச்சநீதிமன்றத்தை ஏமாற்ற பார்க்கிறது தமிழக அரசு: அய்யாகண்ணு April 28, 2017




தமிழக அரசை எதிர்த்து தலைமை செயலகத்தில் போராட்டம் நடத்தப்போவதாக அய்யாக்கண்ணு எச்சரிக்கை!

விவசாயிகள் தற்கொலை தொடர்பான  வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஒரு சில விவசாயிகள் மட்டுமே வறட்சியால் தற்கொலை செய்து கொண்டதாகவும், மேலும் சிலர் சொந்த பிரச்னைகளுக்காக தற்கொலை செய்துக்கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.உயிரிழந்த விவசாயிகளில் பெரும்பாலோனோர் குடும்பப் பிரச்சனைகளாலும் உடல்நலக்குறைவாலும் உயிரிழந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தென்னிந்திய தேசிய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு, “ தவறான தகவலை தெரிவித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை ஏமாற்றப்பார்க்கிறது. இப்படி ஒரு தவறான தகவலை தெரிவித்தால் மத்திய அரசு விவசாயிகளுக்கு எப்படி நிவாரண தொகையை அளிக்கும்?. இதை கண்டித்து தலைமை செயலகத்தின் எதிரில் விவசாயிகள் சங்கம் சார்பாக போராடுவோம்” என தெரிவித்தார்