Pages - Menu

Pages - Menu

Menu

வியாழன், 27 ஏப்ரல், 2017

காரை எங்க பார்க் பண்ணுனீங்க? கூகுள் மேப்பில் பார்க்கலாம்!

காரை எங்கே நிறுத்தினீர்கள் என்பதை கூகுள் மேப் மூலம் அறிந்து கொள்ளும் வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
ஆண்ட்ராய்டு தளத்தில் கூகுள் மேப்பில், சேவ் யுவர் பார்க்கிங் (Save your parking) என்ற ஆப்ஷனை பயன்படுத்தி காரை எங்கே நிறுத்தினீர்கள் என்பதை பதிவு செய்து கொள்ளலாம். கார் நிறுத்தம் குறித்த கூடுதல் தகவல்களையும் இதில் சேர்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கார் நிறுத்த தகவல்களையும் இடத்தையும் புகைப்படமாக எடுத்து நண்பர்களுக்கு அனுப்பும் வசதியும் இதில் உள்ளது.