Pages - Menu

Pages - Menu

Menu

சனி, 24 ஜூன், 2017

அதிமுக மீது திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சாடல் June 24, 2017

அழைப்பு விடுக்காமலேயே பாஜகவுக்கு, அதிமுக அணிகள் போட்டிபோட்டு சேவகம் புரிவதாக திமுக மகளிர் அணிச் செயலாளரும், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி விமர்சித்துள்ளார்.

சென்னையில் கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கனிமொழி பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, குலசேகரன் பட்டினத்தில் ஏவுதளம் அமைக்க வாய்ப்பில்லை என்று இஸ்ரோ தலைவர் கிரண்குமார் கூறியுள்ளதற்கு வருத்தம் தெரிவித்தார். ஏவுதளம் அமைப்பது குறித்து விஞ்ஞானிகள்தான் முடிவு செய்ய வேண்டுமே ஒழிய மத்திய அரசு முடிவு செய்யக்கூடியதல்ல என தெரிவித்தார். இதனிடையே, குடியரசுத்தலைவர் தேர்தல் குறித்து பேசிய அவர், பாஜக அழைக்காமலேயே அதிமுகவின் அணிகள் போட்டிபோட்டுக்கொண்டு சேவகம் செய்வதாக விமர்சித்தார்.