Pages - Menu

Pages - Menu

Menu

ஞாயிறு, 30 ஜூலை, 2017

வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரிக்க பா.ம.க வலியுறுத்தல்! July 30, 2017

39 லட்சம் மக்கள் தொகை கொண்ட வேலூர் மாவட்டத்தை, மூன்று மாவட்டமாக பிரித்திடக் கோரி, திருப்பத்தூரில் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது பேசிய அவர், தமிழகத்தில் அதிக தாலுக்காவையும், 13 சட்டமன்ற  தொகுதிகளையும் உள்ளடக்கியது வேலூர் மாவட்டம் என குறிப்பிட்டார். 

வெளிநாடுகளில் 20 லட்சம் மக்கள் தொகை இருந்தால் தனி நாடு என்று அறிவிக்கப்படும் நிலையில், 39 லட்சம் மக்கள் தொகை கொண்ட வேலூர் மாவட்டத்தை மூன்று மாவட்டமாக ஏன் அறிவிக்ககூடாது? எனவும் ராமதாஸ் அப்போது  கேள்வி எழுப்பினார்.