Pages - Menu

Pages - Menu

Menu

வியாழன், 12 அக்டோபர், 2017

மழை நீர் ஒழுகியதால் பேருந்து ஓட்டுநர் மற்றும் பயணிகள் நனைந்தபடி இன்னலுக்கு ஆளாகினர்.

தமிழக அரசு பேருந்தின் அவல நிலை


மதுரையிலிருந்து வந்த அரசு விரைவுப் பேருந்தில், மழை நீர் ஒழுகியதால் பேருந்து ஓட்டுநர் மற்றும் பயணிகள் நனைந்தபடி இன்னலுக்கு ஆளாகினர்.

மதுரையிலிருந்து திருச்சி வழியாக திருப்பதி செல்லும் அரசு விரைவு பேருந்து 25-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்தது. மதுரையை அடுத்த கொட்டாம்பட்டி பகுதியில், பேருந்து வந்த போது, திடீரென மழை பெய்தது. மழை நீர் பேருந்தின் உள்ளே ஒழுகியதால் இருக்கையில் அமர்ந்திருந்த பயணிகள் மட்டுமின்றி ஒட்டுநர், நடத்துனர் ஆகியோரும் நனைந்தனர். 

மழையின் வேகம் அதிகரிக்க, பேருந்தினுள் மழைநீர் ஆறாக ஓட தொடங்கியது. இதனால் பேருந்தில் பயணம் செய்தவர்கள் அச்சத்துடன் பயணம் செய்து, திருச்சி  மத்திய பேருந்து நிலையம் வந்தடைந்தனர். பேருந்தை முறையாக பராமரிக்காததால், போக்குவரத்து நிர்வாகம், போக்குவரத்து துறை அமைச்சர் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.