தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் 20% முன்னுரிமையை கண்டிப்புடன் பின்பற்றவும் - உயர்நீதிமன்றம்! November 24, 2017
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 20 சதவிகித முன்னுரிமை வழங்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை கண்டிப்புடன் பின்பற்ற தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரைவுரையாளர் பணிக்காக விண்ணப்பித்த திருவண்ணாமலையை சேர்ந்த செந்தில்குமார் தாக்கல் செய்த மனு நீதிபதி ராஜா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, தமிழ் வழியில் படித்த மனுதாரரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அனுமதிக்க உத்தரவிட்டார். மேலும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவிகித முன்னுரிமை என்ற அரசாணையை கண்டிப்புடன் பின்பற்றவும் நீதிபதி உத்தரவிட்டார்.