Pages - Menu
▼
Menu
▼
அடுத்த 48 மணிநேரத்தைப் பொறுத்தவரை... November 29, 2017
அடுத்த இரண்டு நாட்களில் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னையில் பேசிய வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், வட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகக் கூறினார்.சென்னையைப் பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பலத்த காற்று வீசும் என்றும் பாலச்சந்திரன் எச்சரித்தார்