Pages - Menu

Pages - Menu

Menu

வியாழன், 14 டிசம்பர், 2017

நிலக்கரி முறைகேடு: முன்னாள் முதலமைச்சர் மதுகோடா குற்றவாளி என தீர்ப்பு! December 14, 2017

Image

நிலக்கரி முறைகேடு வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் மதுகோடா, நிலக்கரித்துறை முன்னாள் செயலர் குப்தா உள்ளிட்ட 6 பேர் குற்றவாளி என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இவர்களுக்கான தண்டனை விபரங்கள் இன்று அறிவிக்கப்படும் என, நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2012ம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாக மத்திய தணிக்கை குழு அறிக்கை வெளியிட்டது.

அப்போதைய ஜார்கண்ட் முதலமைச்சர் மதுகோடா முறைகேடாக தனியார் நிறுவனத்திற்கு நிலக்கரி சுரங்கத்தை ஒதுக்கீடு செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு இந்த வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.

அதில் ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் மதுகோடா உள்ளிட்ட 6 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தீர்ப்பின் விபரங்கள் இன்று அறிவிக்கப்படுகிறது.