வரலாறு காணாத அளவிற்கு விலை உயர்ந்த ஆபரணத் தங்கம்! January 26, 2018
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று 2,895 ரூபாய்க்கு விற்கப்பட்ட 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் இன்று 27 ரூபாய் உயர்ந்து 2,922 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு சவரன் 23,160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 22 கேரட் ஆபரணத்தங்கம் இன்று 216 ரூபாய் உயர்ந்து, 23,376 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால் தங்கம் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
வெள்ளி ஒரு கிராம் 43 ரூபாய் 10 காசுகளுக்கும், ஒரு கிலோ 43ஆயிரத்து 100 ரூபாக்கும் விற்பனை செய்யப்படுகிறது.