பெரம்பலூர்: அரசு பள்ளிக்கு சீர்வரிசை அனுப்பிய ஊர் பொதுமக்கள் January 31, 2018
பெரம்பலூர் அருகே அரசு பள்ளிக்கு ஊர் பொதுமக்கள் சீர்வரிசை செய்யும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம் கொத்தவாசல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியை தரம் உயர்த்த உதவி செய்ய தலைமை ஆசிரியர் இளங்கோவன் பெற்றோர் ஆசிரியர் கழகத்திடம் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து பெற்றோர்கள், பொது மக்கள், குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ராமசந்திரன் ஆகியோர் தங்களது சொந்த பணத்தில் பள்ளிக்கு தேவையான பொருட்களை வழங்க முன்வந்தனர்.
இதையடுத்து பள்ளிக்கு தேவையான பொருளை சீர்வரிசையாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவ, மாணவியர்களுக்கும் பள்ளிக்கும் தேவையான பொருட்களான ஏசி, கனிணி, நாற்காலி, ஸ்மார்ட் போர்டு, டேபிள், சேர், ஆகியவை வழங்கப்பட்டன.