Pages - Menu

Pages - Menu

Menu

வெள்ளி, 5 ஜனவரி, 2018

அரசுப் பேருந்துகள் இயங்காததால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முடக்கம்! January 5, 2018

போக்குவரத்து ஊழியர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்த போராட்டத்தால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 6 போக்குவரத்து பணிமனைகளில் உள்ள 325 பேருந்துகளில் 10 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

ஈரோட்டில், பேருந்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால், உள்ளூர் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் பேருந்து கிடைக்காமல், காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதால், ஆட்டோ, வேன் ஓட்டுநர்களைக் கொண்டு சில பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக தொழிற்சங்க ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் கேரளாவில் இருந்து வரும் பேருந்துகள் மாவட்ட எல்லையான களியக்காவிளையில் மட்டுமே இயக்கப்படுகின்றன. 

ராணிதோட்டம் பணிமனையில் இருந்து வெளியே வந்த பேருந்துகளை தொழிற்சங்கத்தினர் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால், போலீசாருக்கும், தொற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 90 சதவிகித அரசு பேருந்துகள் இயக்கப்படாததால், அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  

பணிக்கு செல்ல இயலாமல் 20 ஆயிரம் ஊழியர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே போல், கரூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருப்பூர், சிவகங்கை, உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களிலும் பேருந்துகள் இயக்கப்படாததால் நகரமே ஸ்தம்பித்தது. அன்றாட தேவைக்கு கூட பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.