Pages - Menu

Pages - Menu

Menu

வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

மும்பை தமிழ் பாசறையின் கொடியை காப்பி அடித்து கமல் கட்சிக் கொடி!? February 22, 2018

Image

கமல்ஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யத்தின் கட்சி கொடியில் உள்ள 6 இணைந்த கைகள், மும்பை செம்பூர் தமிழர் பாசறை அமைப்பின் லோகோவில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

மும்பை செம்பூர் பகுதி தமிழர்களை இணைக்கும் வகையில் செயல்பட்டுவரும் செம்பூர் தமிழர் பாசறை அமைப்பின் லோகோ, மத்தியில் அ என்ற எழுத்துடன் 6 இணைந்த கைகளை கொண்டதாக உள்ளது. 

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கான கொடியில் இடம்பெற்றுள்ள ஆறு இணைந்த கைகள், செம்பூர் தமிழர் பாசறை அமைப்பின் லோகோவில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இதனால், மக்கள் நீதி மய்யம் கொடியில் மய்யம் கொண்ட மும்பை தமிழர் பாசறையின் லோகோ என சமூகவலைதளங்களில் செய்திகள் பரவிவருகின்றன.