சிறுமி ஆஷிஃபா வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் பேரணி! April 14, 2018
காஷ்மீர் சிறுமி ஆஷிஃபா வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தினர்.
சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் பேரணி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள், கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
கத்துவா மற்றும் உனாவ் சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்தும், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசை அவர்கள் வலியுறுத்தினர். அப்போது பேசிய திருநாவுக்கரசர், நாட்டில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டினார்.