Pages - Menu

Pages - Menu

Menu

வெள்ளி, 6 ஏப்ரல், 2018

ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் எதிர்ப்பு! April 6, 2018

Image

சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் தோழமை கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன், ஐபிஎல் போட்டிகளை தவிர்ப்பது நல்லது என குறிப்பிட்டார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும், ஐபிஎல் ஏற்பாட்டாளர்கள் நடத்துபவர்கள், தமிழகத்தின் உணர்வுகளை போட்டிகளை மதித்து தள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.