Pages - Menu
▼
Menu
▼
சூறாவளி காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழை..! May 12, 2018
கிருஷ்ணகிரியில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.அக்னி நட்சத்திரத்தை தணிக்க வந்த ஆலங்கட்டி மழை, உற்சாகத்தில் மக்கள் திலைக்கின்றனர்.கிருஷ்ணகிரியில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், மாலையில் திடீரென்று பலத்த காற்றுடன் மழை பெய்தது.சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழை காரணமாக, வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.