Pages - Menu

Pages - Menu

Menu

புதன், 2 மே, 2018

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் காவல்நிலையத்தில் மர்ம மரணம்! May 2, 2018

Image

மதுராந்தகம் அருகே காவல்நிலையத்திற்கு விசாரணை அழைத்து செல்லப்பட்டவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். 

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சூனாம்பேடு பகுதியை சேர்ந்த சிற்றரசு, அச்சிறுப்பாக்கம் உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில் வேலை செய்து வந்தார். 

அவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த  நாவம்மாள் என்பவருக்கும் வீட்டு மனை பிரச்சனை தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இது பற்றி நாவம்மாள் சூனாம்பேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். 

இதையடுத்து சிற்றரசை போலீசார் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். 

இந்நிலையில் இரவு முழுவதும் காவல்நிலையத்தில் வைக்கப்பட்ட சிற்றரசு, அங்கேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

ஆனால் சிற்றரசு போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டதாக அவரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.