Pages - Menu

Pages - Menu

Menu

ஞாயிறு, 8 ஜூலை, 2018

தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு! July 8, 2018


வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று வரும் நிலையில், மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 5 சென்டி மீட்டர் மழையும், வால்பாறையில் 4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Image