Pages - Menu

Pages - Menu

Menu

சனி, 8 செப்டம்பர், 2018

​பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் நடத்தும் போராட்டத்திற்கு திமுக ஆதரவு! September 8, 2018

Image

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் நடத்தும் போராட்டத்திற்கு திமுக ஆதரவு அளிக்கும், என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய  மு.க.ஸ்டாலின், அதிமுக அரசை கண்டித்து, வரும் 18-ம் தேதி திமுக சார்பில் போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் தாமதிக்காமல் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், குட்கா ஊழலில் சிக்கியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரனை பதவி நீக்க வேண்டும் உள்பட கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக ஸ்டாலின் கூறினார்.