Pages - Menu

Pages - Menu

Menu

சனி, 6 அக்டோபர், 2018

ரஷ்யாவுடன் ரூ.40,000 கோடியில் ஐந்து S400 ரக ஏவுகணைகளை வாங்க இந்தியா ஒப்பந்தம்! October 5, 2018

அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடமிருந்து 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான எஸ்-400 ஏவுகணைகளை இந்தியா வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்தியாவில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், டெல்லியில் உள்ள ஹைதரபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது இருவரும் ஒருவரையொருவர் ஆரத்தழுவி கொண்டனர்.

பின்னர் இருநாடுகளுக்கு இடையே, 40 ஆயிரம் கோடி ரூபாய மதிப்பிலான, எஸ்-400 நவீனரக ஏவுகணைகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவின் வான்வழி பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், ஐந்து எஸ்-400 ஏவுகணைகளை ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்கவுள்ளது.

எஸ்-400 எதிர்ப்பு ராணுவ தளவாடங்கள் மூலம், இந்தியாவில் இருந்தபடியே பாகிஸ்தானில் உள்ள விமான தளங்களை அழிக்க முடியும், என்பது குறிப்பிடத்தக்கது. 2020-ம் ஆண்டு வான்வழி பாதுகாப்புக்கான 5 ஏவுகணைகளும் இந்தியாவிடம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ள நிலையில், அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதேபோன்று இந்திய விண்வெளி வீரர்களுக்கு, ரஷ்யா பயிற்சி அளிக்கும் ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது.
Image