Pages - Menu

Pages - Menu

Menu

சனி, 13 அக்டோபர், 2018

​#METOO குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரபலங்களின் பட்டியல்! October 13, 2018

இந்தியா முழுவதும் ME TOO விவகாரம் பேசு பொருளாகி வருகிறது. இதில் பல்வேறு துறையில் பாலியல் தொந்தரவு கொடுத்த பிரபலங்களை குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களது குற்றச்சாட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் இது வரை குற்றம்சாட்டப்பட்ட பிரபலங்கள் பற்றிய விவரங்கள்.

#METOO குற்றம்சாட்டப்பட்டவர்கள்:  

காலா படத்தில் வில்லனாக நடித்த நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா புகாரளித்தார். 

மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீது 10 பெண்கள் புகார் அளித்தனர்.

மூன்று முறை தேசிய விருது வாங்கிய இயக்குநர் விகாஸ் பால் மீது அவரது தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றிய பெண் புகார் அளித்துள்ளார். 

இந்தியாவின் பிரபல நாவல் எழுத்தாளர் என்ற புகழப்படும் சேத்தன் பகத் மீது பெண் பத்திரிகையாளர் புகார் அளித்துள்ளார். 

ஏழு முறை தேசிய விருது வாங்கிய கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் அளித்துள்ளார். 

இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா மீது விமான பணிப்பெண் புகார் அளித்துள்ளார். 

ME TOO விவகாரம் இந்தியாவில் வெடிப்பதற்கு முன்பாக ஹாலிவுட்டில் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ண்ஸ்டீன், நடிகர்கள் பென் அஃப்லேக், கேவின் ஸ்பேசி ஆகியோர் மீது பல பெண்கள் பாலியல் புகார் முன் வைத்ததை அடுத்து பெரிய சர்ச்சை வெடித்தது.
Image