Pages - Menu

Pages - Menu

Menu

வெள்ளி, 12 அக்டோபர், 2018

​திருச்சியிலிருந்து துபாய் புறப்பட்ட விமானம் ஓடுதள சுற்றுச்சுவரில் மோதியதால் பரபரப்பு! October 12, 2018

Image

திருச்சியில் இருந்து துபாய் புறப்பட்டு சென்ற விமானம், விமான ஓடுதளத்தின் சுற்றுச்சுவர் மீது மோதி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சியில் இருந்து துபாய் செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், இன்று அதிகாலை 1.20 மணியளவில் புறப்பட்டு சென்றது. அப்போது, விமான ஓடுதளத்தில் இருந்து விமானம் மேலே எழுந்தபோது, சுற்றுச்சுவரில் மோதியபடி சென்றுள்ளது.

மேலும், சுற்றுச்சுவர் அருகே இருந்த ஏடிசி டவர் மீதும் மோதியதாக தெரிகிறது. இதனால், விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து, விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மும்பை விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது.

விமானியின் கவனக்குறைவு அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது. சுற்றுச்சுவர் மீது மோதியதால், விமானத்தின் டயர்கள் சேதம் அடைந்தன.

எனினும், விமானத்தில் இருந்த 136 பயணிகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, விமானம் மோதியதால், சுற்றுச்சுவர் இடிந்த இடத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.