Pages - Menu

Pages - Menu

Menu

வெள்ளி, 2 நவம்பர், 2018

புதுக்கோட்டையில் ஏடிஎம்களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி! November 2, 2018

Image


புதுக்கோட்டையில் உள்ள பெரும்பாலான ஏடிஎம்களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை, பட்டாசு, இனிப்பு உள்ளிட்டவைகளின் விற்பனை சூடுபிடித்துள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில் பொருட்களை வாங்க தற்போது பணத் தேவை அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் ஏடிஎம்களை அதிகம் நாடுகின்றனர்.

இதனிடையே, புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான ஏடிஎம்களில் பணம் இல்லாததாலும், இணையதள கோளாறு காரணமாகவும் செயல்படவில்லை. இந்த சம்பவம், பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதனால், வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மேலும், தீபாவளி பண்டிகைக்கான பொருட்கள் வாங்க முடியவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.