
source: ns7.tv
தென் தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மாலை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென் மேற்கு வங்க கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலையின் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி கோவை, உள்ளிட்ட தமிழகத்தின் மலை சார்ந்த பகுதிகளில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான வானிலை இருப்பதால் மழை பெய்யுமா என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்த மக்களுக்கு இந்த செய்தி சற்று நிம்மதியை தருவதாக இருக்கிறது.