Pages - Menu

Pages - Menu

Menu

வெள்ளி, 7 டிசம்பர், 2018

புதுச்சேரியில் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் 14ம் தேதி கூடவுள்ளதாக தகவல் December 07, 2018

Image

மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசை அனுமதிக்ககூடாது என வலியுறுத்தி புதுச்சேரியில் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் 14ம் தேதி கூடவுள்ளதாக மேலும் தகவல் வெளியாகியுள்ளது. மேகதாதுவில் அணை கட்டும் திட்ட வரைவுக்கு மத்திய நீர்வள ஆணையம் வழங்கிய அனுமதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது 
மேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக புதுச்சேரியில் சிறப்பு சட்டப்பேரவை கூடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
நேற்று  கர்நாடகா அமைச்சர் எழுதிய கடிதத்தில் மாநில மக்கள் வாழ்வாதாரத்தை பதிக்காதபடி நடவடிக்கை எடுக்கபடும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு   எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார். மேலும்  புதுச்சேரி அரசு   தமிழகத்தைப் போன்று மேகதாது அணைக்கு எதிராக தனித்தீர்மானம் போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

credit: ns7.tv