Pages - Menu

Pages - Menu

Menu

சனி, 12 ஜனவரி, 2019

சுருளும் வகையிலான புதிய தொலைக்காட்சி அறிமுகம்! January 09, 2019

Image
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகைரில் நடைபெற்று வரும், உலகின் மிகப்பெரிய எலக்ட்ரானிக் பொருள் கண்காட்சியில், சுருளும் வகையிலான புதிய தொலைக்காட்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
8ம் தேதி துவங்கிய இந்த கண்காட்சியில், ஏராளமான புதிய படைப்புகளை நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ளன. அதில், எல்.ஜி நிறுவனத்தின் புதிய தயாரிப்பான சுருளும் தொலைக்காட்சி, எலக்ட்ரானிக் பிரியர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
தொலைக்காட்சியை பார்க்காத நேரத்தில், அதை மரப்பெட்டிக்குள் பத்திரமாக சுருட்டி வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு புதிய வகையிலான ரோபோக்களும் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. 
பல்வேறு தொழில்நுட்ப வசதிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தொலைக்காட்சி, 4K Resolution கொண்டது. மேலும், பயனாளிகள் எளிமையாக கையாளக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  ஆப்பிள் ஐபாட், ஐபோன் போன்றவற்றில் இருந்து கண்ட்ரோல் செய்யப்படுவது மட்டுமல்லாமல், சிரி போன்றவற்றாலும் கட்டுப்படுத்த முடிகிறது. 
தொலைக்காட்சியை கட்டுப்படுத்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான கூகுள் அசிஸ்டென்ஸ் மற்றும் அமேசான் அலெக்ஸா போன்றவற்றையும் பயன்படுத்த முடியும் என தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டபோது பல மக்கள் இதனை பார்த்து வியந்தனர்.