Pages - Menu

Pages - Menu

Menu

வியாழன், 23 மே, 2019

மக்கள் கணிப்பு தான் உண்மையான கணிப்பு : இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் May 22, 2019

Image
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன், தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும், என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை ராயபுரத்தில் நடந்த, இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், நாம் என்ன எதிர்பார்க்கிறோமா, அது தான் நடக்கும் என்றார். மக்கள் கணிப்பு தான் உண்மையான கணிப்பு, என கூறிய ஸ்டாலின் , கருத்து கணிப்புகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது என தெரிவித்தார். 
மத்தியில் ராகுல்காந்தி நிச்சயம் அடுத்த பிரதமர் ஆவார், என குறிப்பிட்ட ஸ்டாலின்,  மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன், தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றார்