Pages - Menu

Pages - Menu

Menu

சனி, 1 ஜூன், 2019

மக்களவை காங்கிரஸ் குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு! June 01, 2019

Image
டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டத்தில், அக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
காங்கிரஸ் கட்சி சார்பில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட மக்களவை எம்.பி.க்களின் கூட்டம் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதில் 52 மக்களவை எம்.பி.க்களுடன், மாநிலங்களவை உறுப்பினர்களும் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்படுவது என்பதற்கான வியூகங்கள் வகுக்கப்படும் எனக் கூறப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக சோனியா காந்தியை, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் முன்மொழிந்தார். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்த, 12 கோடியே 13 லட்சம் வாக்காளர்களுக்கு, சோனியாகாந்தி நன்றி தெரிவித்துக் கொண்டார்.