Pages - Menu

Pages - Menu

Menu

வெள்ளி, 7 ஜூன், 2019

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்! June 07, 2019

Image
மாணவர்களின் மருத்துவக் கனவை தகர்க்கும் நீட் தேர்வை தாமதமின்றி ரத்து செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நீட் தேர்வு முடிவில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்தாலும், முன்னேறிய வகுப்பை சேர்ந்தவர்களே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இது ஏழை மாணவர்களை பின்னுக்குத் தள்ளும் சமநீதி இல்லாத நடவடிக்கையாகவே அமைந்துள்ளதாகவும் ஸ்டாலின் விமர்சித்தார்.  
மேலும் நீட் தேர்வு ரத்து என்ற வாக்குறுதிக்கு ஆதரவாக தமிழக மக்கள் வாக்களித்துள்ளதாகவும்,  நீட் தேர்வை ரத்து செய்வதற்காக நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து திமுக போராடும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை, மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வர திமுக பாடுபடும் எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்..