Pages - Menu

Pages - Menu

Menu

புதன், 10 ஜூலை, 2019

ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டுவரும் பணி தாமதம்..! July 10, 2019

Image
ராட்சத பைப்புகள் பதிக்கும் பணியில் ஏற்பட்டுள்ள கால தாமதத்தால், ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு, ரயில் மூலம் குடிநீர் கொண்டுவரும் பணி தாமதமாகியுள்ளது. 
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு வருவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலான பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில், இன்று தண்ணீர் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. மேட்டு சக்கரத்திலிருந்து ரயில்வே டிராக் வரை குழாய்களை பதித்த அதிகாரிகள், தனியார் நிலத்திலும் குழாய்களை பதித்தனர். 
இதற்கு நில உரிமையாளர் இளையராஜா என்பவர் எதிர்ப்பு தெரிவித்ததால், குழாய் பதிப்பதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர், ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் குழாய் பதிக்கும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனால், இன்று வரும் என எதிர்பார்க்கப்பட்ட குடிநீர், நாளைக்கே சென்னை வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
credir ns7.tv