Pages - Menu

Pages - Menu

Menu

புதன், 24 ஜூலை, 2019

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம்...! July 23, 2019

credit Ns7.tv
Image
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில்,  ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை செயல்படுத்த வேண்டாம் என மத்திய அரசை கேட்டுக்கொள்ளும் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இதனிடையே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் அரசு, புதுச்சேரி மாநிலம் ஏனாமில் ஆயில் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டதை திரும்பபெறுமா என்று அதிமுக சட்டமன்றக் கட்சித்தலைவர் அன்பழகன் கேள்வி எழுப்பினர். இதனால் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அன்பழகன் பேசிய வார்த்தைகளை சபாநாயகர் அவைக்குறிப்பில் இருந்து நீக்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.