Pages - Menu

Pages - Menu

Menu

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

புதுச்சேரியில் 10 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமல்! August 02, 2019


ns7.tv
Image
புதுச்சேரியில் பத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமலுக்கு வந்தது. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஆகஸ்ட் ஒன்று முதல் தடை விதிக்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்திருந்தது. 
எனினும் தடை உத்தரவானது ஒரு நாள் தாமதமாக இன்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி, ஒரு முறை பயன்படுத்தப்படும் பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல், பிளாஸ்டிக் தட்டுக்கள், தெர்மாகோல் தட்டு மற்றும் குடுவைகள் உள்ளிட்ட பத்து வகையான பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும், தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதித்துள்ள புதுச்சேரி அரசு, அதற்கு மாற்றாக வேறு வகையான பொருட்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. தடை ஆணைய மீறுபவர்கள் மீது சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியின் படி தண்டிக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளது.