Pages - Menu

Pages - Menu

Menu

சனி, 17 ஆகஸ்ட், 2019

கிரண்பேடியின் அதிகாரம் குறைந்தால், இந்தியாவின் முதன்மை மாநிலமாக புதுச்சேரியை மாற்றுவோம் - நாராயணசாமி August 17, 2019

Image
புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியின் அதிகாரம் குறைந்தால், இந்தியாவின் முதன்மை மாநிலமாக புதுச்சேரியை மாற்றுவோம் என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.  
இந்தியாவுடன் புதுச்சேரி இணைந்த நாளை நினைவு கூரும் வகையில் கீழூரில் உள்ள நினைவிடத்தில் சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் விழா நேற்று நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட முதலமைச்சர் நாராயணசாமி,  தேசிய கொடி ஏற்றி வைத்து காவல்துறையினர் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
அதனை தொடர்ந்து விழாவில் தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து  கவுரவித்தார்.  மத்திய அரசு மூலம் வழங்கப்படும் நிதி மானியம் 26 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

credit ns7.tv