Pages - Menu

Pages - Menu

Menu

செவ்வாய், 10 செப்டம்பர், 2019

புலனாய்வுத்துறையின் நடவடிக்கையால் சிக்கலில் உள்ள மத்திய பிரதேச முதல்வர்..!

Image
சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கை சிறப்பு புலனாய்வு குழு மீண்டும் கையில் எடுத்திருப்பது மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 
1984ம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திராகாந்தி சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அப்போது நடந்த கலவரத்தில், சீக்கியர்கள் பலர் கொல்லப்பட்டனர். சீக்கியர்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டியதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெகதீஷ் டைட்லர், தற்போதைய மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. குற்றவாளிகள் சிலருக்கு அடைக்கலம் கொடுத்ததாக கமல்நாத்துக்கு 
எதிராக நானாவதி கமிஷனிடம் சிலர் சாட்சியம் அளித்திருந்தனர். 
தற்போது கமல்நாத்திற்கு எதிராக 2 பேர் சாட்சியளி
க்கத் தயாராக இருக்கும் நிலையில், சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை தொடங்கவுள்ளது.

credit ns7.tv