Pages - Menu

Pages - Menu

Menu

வியாழன், 17 அக்டோபர், 2019

வருகிற 25ம் தேதி முதல் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம்..!

Image
தமிழகம் முழுவதும் வரும் 25ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த உள்ளதாக, அரசு மருத்துவர் சங்கம் அறிவித்துள்ளது. 
கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், வேலை நிறுத்தப் போராட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. 
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நரசிம்மன், சம வேலைக்கு சம ஊதியம், பட்டமேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 25ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கூறினார். 

credit ns7..tv