Pages - Menu

Pages - Menu

Menu

புதன், 15 ஜனவரி, 2020

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கிரிக்கெட் மைதானத்தில் போராட்டம்!

Image
இந்திய, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஒருநாள் போட்டியின் போது ரசிகர்கள் சிலர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில்,அனைத்து மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இந்திய, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஒருநாள் போட்டியின் போது மும்பை வான்கடே மைதானத்திலும் இந்த போராட்டம் வெடித்துள்ளது.

போட்டியை காணவந்த ரசிகர்கள் சிலர், தங்களது ஆடைகளில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான எழுத்துக்களை பொறித்து எதிர்ப்பை பதிவு செய்தனர். NO CAA, NO NRC, NO NPR என்ற வாசகங்கள் மைதானத்தில் வெளிப்பட்டன.இதற்கு அங்கிருந்த காவலர்கள் எதிர்ப்பு தெரிவித்த போது, ரசிகர்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

credit ns7.tv