Pages - Menu

Pages - Menu

Menu

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2020

சிஏஏவுக்கு எதிரான போராட்டங்களை கட்டுப்படுத்த 6 சிறப்பு அதிகாரிகள் நியமனம்!

credit ns7.tv
Image
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை கண்காணிக்க சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி மேற்பார்வையில் ஆறு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தின்போது தடியடி நடத்தப்பட்டது. இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் போராட்டத்தை கண்காணிக்க தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவின் பேரில், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஜெயண்ட் முரளி தலைமையில் ஆறு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அபய்க்குமார் சிங் மதுரை மாநகர் மற்றும் மதுரை சரகத்திற்கும், கூடுதல் டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் திருநெல்வேலி மாநகர் மற்றும் நெல்லை சரகத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. முருகன் நெல்லை சரகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார். 

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், பழனி ஆகிய பகுதிகளுக்கு ஸ்டாலின், தேனி மாவட்டம் கம்பம், போடி பகுதிகளுக்கு பாஸ்கரன் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்திற்கு மகேந்திரன் ஆகிய காவல்துறை அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.