Pages - Menu

Pages - Menu

Menu

புதன், 28 அக்டோபர், 2020

மனுதர்மம் இந்திய அரசியல் சாசனத்தை விட உயர்ந்ததா என பாஜகவினர் தெளிவுபடுத்த வேண்டும் - கார்த்தி சிதம்பரம்

Image

மனுதர்மம் இந்திய அரசியல் சாசனத்தை விட உயர்ந்ததா என பாஜகவினர் தெளிவுபடுத்த வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் நடைபெற்ற மருது பாண்டியர்களின் குருபூஜை விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், குஷ்பு முன்னாள் நடிகை என்பதனால் அவரது கைதை பாஜகவினர் பெரிது படுத்துவதாகவும் இது சாதாரண நடைமுறைதான் என்றும் தெரிவித்தார்.  

திருமாவளவன் தனது சொந்தக் கருத்தைக் கூறவில்லை என்று குறிப்பிட்ட கார்த்தி சிதம்பரம், மனுசாஸ்திரம் நூலில் கூறப்பட்ட கருத்துக்களைத்தான் கூறியுள்ளார் என்றும் தெரிவித்தார். மனுதர்மம் இந்திய அரசியல் சாசனத்தை விட உயர்ந்ததா என பாஜகவினர் தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்திய அவர், திருமாவளவன் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஏதோ ஒரு கருத்தரங்கில் பேசியதை திருத்தி போலியான போராட்டங்களை பாஜகவினர் நடத்தி வருவதாக குற்றம் சாட்டினார்