Pages - Menu

Pages - Menu

Menu

திங்கள், 12 அக்டோபர், 2020

தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன” - அமைச்சர் விஜயபாஸ்கர்

 கொரோனா பரவலை தடுக்க, தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்கள் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள இந்நேரம், பெரும் சவால் நிறைந்த காலகட்டம் என தெரிவித்தார். அண்டை மாநிலங்களில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதாகவும், இது தமிழகத்திற்கு பெரும் சவாலாக உள்ளதாகவும் கூறினார். 

 

எனவே,  அண்டை மாநிலங்களிலிருந்து நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக, தமிழக எல்லையோர மாவட்டங்கள் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.