Pages - Menu

Pages - Menu

Menu

சனி, 19 பிப்ரவரி, 2022

ஹிஜாப்பை அகற்றுங்கள்… இஸ்லாமிய பெண்ணிடம் ... பூத் ஏஜென்ட் வாக்குவாதம்

 19 2 2022 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி 8வது வார்டு அல்அமீன் பள்ளி வாக்கு சாவடியில், வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களை ஹிஜாப்பை அகற்ற சொல்லி பாஜக முகவர் கிரிராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது


இதைக் கண்டித்து திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சி முகவர்கள், அதிகாரிகள் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். இப்பிரச்சினை விஸ்வரூபம் எடுத்திட, சர்ச்சையை ஏற்படுத்திய பாஜக பூத் ஏஜென்ட் கிரிராஜன், அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.

அவர் வெளியேறிதை தொடர்ந்து, மீண்டும் வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால், காவல் துறையினர் பாதுகாப்பிற்றகாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/bjp-agent-expelled-from-polling-booth-for-ask-to-remove-hijab-413663/